எந்தப் படம் முதலில் வரும்: கமல் பதில்!!!

6th of November 2014
சென்னை:கமல் நடிப்பில் உருவாகும்  ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’  ஆகிய மூன்று படங்களில் எந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆகும் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2012ல் வெளியான ‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு கமலின் எந்தப் படமும் வெளியாகாமல் உள்ளது.  ‘விஸ்வரூபம்-2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய மூன்று படங்களும் கூட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளன.

என் கணிப்பில் ’உத்தம வில்லன்’ திரைப்படம் முதலில் வருவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. எனினும்.  தயாரிப்பாளர்கள் பேசி முடிவெடுத்து இதில் வேறு ஏதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உத்தம வில்லன்’, ’பாபநாசம்’ படங்களின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து படங்கள் ரெடியாக இருக்கின்றன. ’விஸ்வரூபம் 2’ படத்திற்கு மட்டுமே இன்னும் வேலை மிச்சமிருக்கிறது.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எனது மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் ஒரு நிகழ்வாக நான் பார்க்கிறேன் ” என்று கமல் பதில் அளித்திருக்கிறார்.

Comments