18th of November 2014
சென்னை:நடிகை திரிஷாவுக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது.
‘லேசா லேசா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், திரிஷா. கில்லி, சாமி, ஆதி, திருப்பாச்சி, ஜீ, கிரீடம், மவுனம் பேசியதே, உனக்கும் எனக்கும் உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
தமிழ் பட உலகைப்போல் தெலுங்கு பட உலகிலும் திரிஷா முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் இருந்து வந்ததாகவும், பின்னர் அந்த காதல் முறிந்து போனதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், திரிஷாவுக்கு திடீர் என்று திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமகன் பெயர், வருண் மணியன். சென்னையை சேர்ந்த தொழில் அதிபர். இவர், வாயை மூடி பேசவும் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். காவியத்தலைவன் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
திரிஷா-வருண் மணியன் நிச்சயதார்த்தம், சென்னை செனடாப் சாலையில் உள்ள திரிஷா வீட்டில் நடந்தது. அப்போது மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். திரிஷா- வருண் மணியன் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.

Comments
Post a Comment