மாஜி ஹீரோயின்களுடன் நடனமாடும் சிம்பு ஹன்சிகா!!!

30th of November 2014
சென்னை:சிம்பு தற்போது வாலு படத்தின் இறுதி கட்ட படபிடிப்பில் நடித்து வருகிறார், இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.
 
மேலும் ஹன்சிகா விஷாலுக்கு ஜோடியாக ஆம்பள படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் மாஜி ஹீரோயின்களான ரம்யா கிருஷ்ணன் , கிரண் , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர், அதே போல் வாலு படத்திலும் மாஜி ஹீரோயின்களான சரோஜா தேவி, மீனா, சிம்ரன் ஆகியோர் வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் பட முழுக்க வரமாட்டார்கள் படத்தில் ‘தாறுமாறு’என்ற பாடல் இடம் பெறுகிறது இந்த பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி புகழ் பாடுவது போல் வரிகள் வருகிறது. இப்பாடலில்தான் மாஜி ஹீரோயின்களான இவர்கள் நடனமாடுகிறார்கள் இவர்களுடன் ஹன்சிகாவும் ,சிம்புவும் இணைந்து நடனமாட உள்ளனர்

Comments