ஹிந்தியில் வில்லனாக நடிக்கும் பிரபு தேவா!!!

12th of November 2014
சென்னை:கடந்த ஆண்டு 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரெமோ டி சோசா இயக்கத்தில் பிரபு தேவா, கணேஷ் ஆச்சர்ய , கே கே மேனன் , புனித் பதக் , உள்ளிட பலரும் நடித்த எனி படி கேன் டான்ஸ் படம் ஹிட் படமாக அமைந்தது .
 
தற்போது அதை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து வருகிறார்கள் இதில் வருண் தாவன் ,சாரதா கபூர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள், பிரபுவும் நடிக்கிறார்.முதல் படத்தில் பிரபு நல்லவராக நடித்திருந்தார்.

ஆனால் இரண்டாம் பாகத்தில் பிரபு வில்லனாக நடிக்கிறாராம் , இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது எ.பி.சி.டி படத்தின் இரண்டாம் பாகமும் கண்டிப்பாக ஹிட்டாகும் என்கிறார்கள்.

Comments