17th of November 2014
சென்னை:ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ‘மெட்ராஸ்’ படத்தில் வில்லனின் மகன் வேடத்தில், இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லன் வேடம் மட்டும் இன்றி காமெடி, குணச்சித்திரம் என்று பல வேடங்களி ஒரு சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மைம் கோபி, ஆதரவற்ற, நலிந்த ஊனமுற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக, உதவும் வகையில் கடந்த 2 வருடங்களாக ‘மா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி, அந்த குழந்தைகளின் துயர் துடைத்து வருகிறார்.
இந்த ஆண்டுக்கான ‘மா’ நிகழ்ச்சி, நேற்று (நவ.16) சென்னை காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் இதில் நடந்த ‘மா’ என்ற பிரத்யேக நிகழ்ச்சி வந்திருந்த அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பிரபு சாலமன், பாண்டிராஜ், ரஞ்சித், பாலாஜி மோகன், நடிகர் கார்த்தி, காளி, ஜான் விஜய், அசோக், கலையரசன் உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இந்த விழாவில், ‘அன்பு மலர்’ இல்லத்தில் உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகை வழங்கப்பட்டது.
இந்த அமைப்பு குறித்தும், இந்த குழந்தைகளுக்கு உதவவுது குறித்தும் மேலும் விபரங்களை அறிய ’ஜி மைம் ஸ்டுடியோ’ அமைப்பைச் சேர்ந்த மைக் கோபி - 09884032100, அஜித் - 09841236904, கோம்ஸ் - 09884500004 ஆகிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Comments
Post a Comment