புற்றுநோய் பாதித்த இளம்பெண்ணின் ஆசையை நிறைவேற்றினார் ஸ்ருதி ஹாசன்!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
1st of November 2014
சென்னை:புனேவை சேர்ந்தவர் ஷீத்தல் பவார் (17). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவருக்கு நோய் முற்றி இருப்பதாக டாக்டர்கள் கூறியதுடன், ‘அவருக்கு தரும் மருந்துகளால் தற்போது பலன் எதுவும் இல்லை. எனவே அவரை வீட்டுக்கு அழைத்து சென்று கடைசி ஆசைகளை நிறைவு செய்து வையுங்கள் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஷீத்தலின் ஆசைபற்றி கேட்டபோது தனக்கு பிடித்தமான நடிகை ஸ்ருதி ஹாசனை நேரில் பார்க்க வேண்டும் என்றார். இதுபற்றி ‘யாரா இந்தி பட ஷூட்டிங்கில் மும்பையில் நடித்துக்கொண்டிருந்த ஸ்ருதியிடம் மேக் ஏ விஷ் என்ற அமைப்பு தெரிவித்தது.

அதைக்கேட்டு உருக்கமான ஸ்ருதி நிச்சயம் ஷீத்தலை சந்திப்பதாக கூறினார். இயக்குனரிடம் இதுபற்றி கூறி அனுமதி பெற்ற ஸ்ருதி  படப்பிடிப்பில் இருந்து புறப்பட்டு ஷீத்தல் வீட்டுக்கு சென்று நாள் முழுவதும் அவருடன் பொழுதை கழித்தார். ஷீத்தலுக்கு ஆறுதல் கூறிய ஸ்ருதி புற்றுநோயை எதிர்த்து போராடும் அவரது தைரியத்தை பாராட்டினார். இருவரும் சினிமா பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார் ஸ்ருதி. முன்னதாக தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் ஷீத்தலிடம் ஸ்ருதி வழங்கினார்.

Comments