பட தலைப்பு விவகாரம்: விஜய்க்கு நோ: தனுஷுக்கு ஓகே!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
1st of November 2014
சென்னை: பட தலைப்பு விவகாரத்தில் விஜய்க்கு நோ சொன்ன பட நிறுவனம் தனுஷுக்கு ஓகே சொன்னது.ரஜினி நடித்த ‘தில்லுமுல்லு பட டைட்டிலை தன் படத்துக்கு வைக்க சிவா அவரை சந்தித்து கடந்த ஆண்டு அனுமதி கேட்டார். அதற்கு ரஜினி ஓ.கே. சொன்னார்.அதேபோல் ‘மூன்றுமுகம் படத்தில் ரஜினி நடித்த ‘அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தின் பெயரை தலைப்பாக வைத்து கார்த்தி நடித்தார்.
 
தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்துக்கு கமல் நடித்து வெற்றி பெற்ற ‘காக்கி சட்டை படத்தின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்திருந்தது. இதையடுத்து கமலிடமும், பட நிறுவனத்திடமும் டைட்டில் வைக்க அனுமதி பெற முடிவு செய்யப்பட்டது.

தயாரிப்பு பொறுப்பு ஏற்றிருக்கும் நடிகர் தனுஷ், பட ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குனர் துரை செந்தில் ஆகியோர் அனுமதி கேட்டனர். கமல் அனுமதி வழங்கியதுடன், பட நிறுவனமும் ஓ.கே. சொன்னது. இதுபற்றி சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது,
 
காக்கி சட்டை எனது அடுத்த பட டைட்டில். இந்த தலைப்பு வைக்க அனுமதி தந்த கமல்சாருக்கும், சத்யா மூவிஸுக்கும் நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.ஏற்கனவே விஜய் தனது படத்துக்கு ‘காவல்காரன் என்று பெயர் வைக்க சத்யா மூவிஸிடம் அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. பிறகு அப்படத்துக்கு ‘காவலன் என பெயரிடப்பட்டது நினைவிருக்கலாம்.

Comments