இன்று 8 படங்கள் ரிலீஸ்!

28th of November 2014
சென்னை:ஆண்டின் இறுதி பகுதி நெருங்கி வருவதாலும், அடுத்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் வெளிவருது உறுதியாகி விட்டதாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  (நவ 28) இன்று 8 படங்கள் வெளிவருகிறது.
 
காவியத் தலைவன்
 
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படமும், வசந்தபாலன் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமுமான காவியத் தலைவன் நாளை ரிலீசாகிறது. மூன்று முறை வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டு நாளை ரிலீசாகிறது. 1940க்கு முன்பு வாழ்ந்த நாடக நடிகர்களின் கதை. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகாக அனைகா நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை.
 
வேல்முருகன் போர்வெல்ஸ்
 
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தயாரித்த முதல் சொந்தப் படம். நிதி பிரச்னையால் கிடப்பில் கிடந்த படம் இப்போது வெளிவருகிறது. அங்காடி தெரு மகேஷ், ஆருஷி, கஞ்சா கருப்பு, ரகசியா நடித்துள்ளனர். எம்.பி.கோபி இயக்கி உள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை.
 
மொசக்குட்டி
 
ஓளிப்பதிவாளர் ஜீவன் இயக்கி உள்ள படம். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம் மைனா டைப்பில் மலைவாழ் மக்களின் காதல் கதை. ரமேஷ் விநாயகம் இசை அமைத்துள்ளார். மைனா படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
 
விஞ்ஞானி
 
நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றிய பார்த்தி என்பவர் இயக்கி தயாரித்திருக்கும் படம் விஞ்ஞானி. தொல்காப்பியர் கண்டுபிடித்த சக்தி வாய்ந்த நெல்லை இன்றைய பயன்பாட்டுக்கு கொண்டு வரும் விஞ்ஞானி பற்றி கதை.
 
 
5 பேய் கதைகளை கொண்டு தொகுப்பு படமாக வெளிவருகிறது ஆ. அம்புலி டீம் தயாரித்துள்ளது. ஜப்பான், துபாய் நாட்டு பேய்கள். நடுக்கடல் பேய், ஏடிஎம் பேய், நெடுஞ்சாலை பேய் என வெரைட்டி காட்டுகிறார்கள்.
 
இதுதவிர மனம் கொண்ட காதல், புளிப்பு இனிப்பு, என்ற சிறுபட்ஜெட் படங்களும், ஸ்ரேயா நடித்த என் பெயர் பவித்ரா என்ற டப்பிங் படமும் ரிலீசாகிறது.

Comments