7th of November 2014
சென்னை:நடிகர் கமல்ஹாசனின் 60வது ஆண்டு பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் பல்வேறு வகையில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரபல ரேடியோ ஆர்.ஜேவான கோல்மால் விக்னேஷ், கமல்ஹாசனின் 60வது பிறந்தநாளை ஒரு சாதனை நிகழ்வாக கொண்டாட முடிவு செய்துள்ளார்.
அதற்காக நாளை சென்னையில், தொடர்ந்து 12 மணி நேரம் பேசி (டாம் மராத்தான்) சாதனை முயற்சியை நடத்த இருக்கிறார்.
இதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆர்.ஜே தீனா 198 மணி நேரம் தொடர்ந்து ரேடியோவில் பேசியதே சமீபத்திய சாதனையாக உள்லது. ஆனால், அவருடைய சாதனை ரேடியோ மாரத்தான் வகையைச் சார்ந்தது. அதில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு முறை மட்டும் ஆர்.ஜே பேசினால் போதும், மற்ற் நேரங்களில் பாடல்கள், விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டது. ஆனால், தற்போது ஆர்.ஜே விக்னேஷ் மேற்கொள்ள உள்ள இந்த சாதனை முயற்சி முற்றிலும் வேறுபட்டதாம்.
டாம் மாரத்தான் வகையைச் சேர்ந்த இதன் மூலம் ஆர்.ஜே, எந்தவித பாடலோ, விளம்பரமோ, மற்றொருவருடனான உரையாடலோ மேற்கொள்ளக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனை முயற்சியை, கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை, அமைந்தக்கரையில் உள்ள ஸ்கை வாக் மாலில், காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 8 மணி வரை தொடர்ந்து 720 நிமிடங்கல் எந்தவித இடைவெளியும் இல்லாமல் ஆர்.ஜே விக்னேஷ் பேசிக்கொண்டே இருக்கப் போகிறார்.
இப்படி இவர் பேசுவதினால், இவருடைய வோக்கல் கார்ட் எனப்படும் குரல்வளை கிழிவதற்கான வாய்ப்பு இருந்தும், கமல் மீது கொண்டிருக்கும் தீராத அன்பாலும், ரேடியோ மீது கொண்டிருக்கும் பற்றாலும், இந்த சாதனை முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறுகிறார் விக்னேஷ்.
இது தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட உள்ளது.

Comments
Post a Comment