14th of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் 100வது நாள் விழா நடப்பது தற்போது அறிதானதாக மாறியுள்ளது. அப்போதெல்லம் 100 நாட்கள் படங்கள் ஓடினால் வெற்றி என்ற நிலை மாறி, தற்போது ஒரு வாராம் ஒடினாலே வெற்றி தான் என்ற நிலையில் இருக்கிறது தமிழ் சினிமா. இந்த சூழ்நிலையில், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படங்கள் கூட மூன்று வாரங்களை தாண்டாத சூழ்நிலையில், கார்த்தி நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘மெட்ராஸ்’ 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘அட்ட கத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித், இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ வட சென்னை வாழ் மக்களைப் பற்றிய படமாகும். இப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்றதுடன், பல்வேறு அமைப்பினரிடையும், ஊடகங்கள் இடையேயும் பெரும் பாராட்டைப் பெற்றது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்த இப்படம், ஸ்டுடியோ மற்றும் செட் அல்லாமல், முழு படத்தையும் நேரடியாக வட சென்னையிலேயே படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
இப்படத்திற்காக இரவு பகல் பாராக, நடித்த கார்த்தி, வட சென்னை இளைஞராக, சிறப்பாக நடித்தார். பல்வேறு விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்ட மெட்ராஸ் தற்போது 50 நாட்களை கடந்துள்ளது.

Comments
Post a Comment