சென்னை:சமீபத்தில் வெளியான ஹாரர் படங்களில் ‘யாமிருக்க பயமே’ படத்தை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ படமும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சுந்தர்.சி., வினய், சந்தானம், ஹன்சிகா மோத்வானி, லட்சுமி ராய், ஆன்ட்ரியா, கோவை சரளா என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இன்றுள்ள சூழ்நிலையில் ஒரு படம் 50 நாட்களை கடந்து ஓடுவது என்பது அரிதான விஷயம்.
அந்த வகையில் இன்று 50ஆவது நாளை தொட்டுள்ளது சுந்தர்.சி.யின் ‘அரண்மனை’. இந்த சாதனை நிகழ்த்திய ‘அரண்மனை’ பட டீம் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள் தான்.
Comments
Post a Comment