நவம்பர் 26ல் தாரை தப்பட்டை படபிடிப்பு ஆரம்பம்!!!

19th of November 2014
சென்னை:இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான முதல் படம் சேது முதல் படமே நல்ல பேர் சொல்லும் அளவுக்கு கொண்டுத்தார், பின் நந்தா , பிதாமகன் என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தார் ,1999 ஆம் ஆண்டு சேது படம் மூலம் அறிமுகமான இவர் இதுவரை ஆறு படங்கள்தான் இயக்கியிருக்கிறார் , ஆனால் அந்த ஆறு படங்களுமே ஹிட்தான் பாலாவின் படம் என்றாலே வித்யாசமகதான் இருக்கும்.

பாலா தற்போது சசிகுமார் , வரலட்சுமியை வைத்து தாரை தப்பட்டை என்ற படத்தை இயக்க உள்ளார் , சமிபத்தில் இப்படத்துக்கு பாலா ஒரு சின்ன ரிகல்சல் பார்த்து வந்ததாக தகவல்கள் வெளியானது, தற்போது பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படம் உருவாகி இருக்கிறது , இப்படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலா தாரை தப்பட்டை படத்தை இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் ஒரு வருடத்துக்கு ஒரு படம் இயக்கவும் மூன்று படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துயிருப்பதாகவும் தெரிவித்தார்.

Comments