சூர்யாவின் அடுத்த படம் 24!!!

12th of November 2014
சென்னை:சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை முடித்த பிறகு மூன்று படங்களில்
 
நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் , அதாவது சமிபத்தில் சூப்பர் ஹிட் மெட்ராஸ் படத்தை கொடுத்த பா.ரஞ்சித் இயக்கத்திலும் சிங்கம் ஹரி இயக்கத்திலும், சமிபத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட் மனம் படத்தை கொடுத்த விக்ரம்.கே. குமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

விக்ரம்.கே.குமார் 2003 ஆம் ஆண்டு தமிழில் சிம்பு நடித்த அலை படத்தையும் 2009 ஆம் ஆண்டு மாதவன் நடித்த யாவரும் நலம் படத்தை இயக்கியவர், சூர்யா மாஸ் படத்தை முடித்த பிறகு விக்ரம்.கே .குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம் இப்படத்துக்கு 24 என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் இப்படத்துக்கு
எ .ஆர் .ரகுமான் இசையமைக்க உள்ளார்.

Comments