2௦14- ல் ஹாட்ரிக் அடிக்கும் கிருஷ்ணா!!!

6th of November 2014
சென்னை:தமிழ்சினிமாவில் இரண்டாம் கட்டத்தில் இடம்பிடித்த நடிகர்களுக்கு கூட அவர்கள் சொல்லி அடிக்கும் நேரம் ஒன்று கட்டாயம் வரும். அது இப்போது கிருஷ்ணாவுக்கும் வந்துள்ளது. ‘கழுகு’ படத்தின் மூலம் ஓரளவு பரவலாக பேசப்பட்டாலும் எதிர்பார்த்த வெற்றி கிருஷ்ணாவை விட்டு சற்று தூரத்திலேயே நின்றது.
 
ஆனால் இந்த வருடம் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தின் வெற்றியான கிருஷ்ணாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்துள்ளது. அந்த வெற்றியின் ஜோரிலேயே அடுத்து வெளியான ‘வானவராயன் வல்லவராயன்’ படமும் ஓரளவுக்கு சொல்லிக்கொளும்படியாக அமைந்து கிருஷ்ணாவுக்கு உற்சாகத்தை தந்தது.

அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைந்து கிருஷ்ணா நடித்துள்ள ‘வன்மம்’ படம் வரும் நவம்பர்-21ல் வெளியாகவுள்ளது. வேறெந்த நடிகருக்கும் இல்லாத வகையில் கிருஷ்ணாவுக்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க வைக்கும் ஆண்டாக மாறுமா என்பது ‘வன்மம்’ வெளியானால் தெரிந்துவிடப்போகிறது.

Comments