200 கோடி வசூலை நெருங்கும் கத்தி!!!

20th of November 2014
சென்னை:ஏ.ஆர் . முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான கத்தி படம் வெளியான 12 நாட்களிலே 100 கோடி வசூலை அள்ளியது, இந்த நிலையில் இப்படத்தில் நடித்த சதிஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் கத்தி படம் ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து மொத்தம் 160 கோடி வசூல் அள்ளியுள்ளது
 
என்றும் விரைவில் இப்படம் 200 கோடியை தொட என்னுடைய வாழ்த்துகள் என்றும் ட்விட் செய்துயிருக்கிறார் .

இந்த வருடத்தில் கத்தி படம்தான் 100 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Comments