அமெரிக்காவில் 200 திரையரங்குகளில் லிங்கா ரிலீஸ் ஆகிறது!!!

19th of November 2014சென்னை:ரஜினிக்கு உலக அளவிலும் மாபெரும் ரசிகர்கள் உள்ளனர், ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் எந்திரன் அப்படம் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது , இதற்க்கு இடையில் ரஜினியின் அனிமேசன் படமான கோச்சடையான் படம் வெளியானது.

தற்போது ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அனுஷ்கா ,சொனாக்ஷியுடன் இணைந்து நடித்து இருக்கும் லிங்கா படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இப்படத்தின் இசை வெளியட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிக பிரமாண்டமாக நடந்தது தற்போது லிங்கா படத்தை அமெரிக்காவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளார்களாம்
 
அமெரிக்காவில் இப்படத்தை தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிட உள்ளார்களாம், லிங்கா படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம், அமெரிக்கத் திரையுலக வரலாற்றில் இப்படம் ஒரு புதிய சாதனையை படைக்கும் என எதிர்ப்பார்க்கிறார்களாம் .

Comments