MGR Sivaji Rajini Kamal Press Meet Stills!!! வனிதா தயாரிக்கும் படத்தில் ஹீரோவாகும் பாய்பிரண்ட்!!!

5th of October 2014
சென்னை:Tags : MGR Sivaji Rajini Kamal Media Meet Stills, MGR Sivaji Rajini Kamal Press Meet Gallery Pics, MGR Sivaji Rajini Kamal Press Meet images, MGR Sivaji Rajini Kamal Team Meet Media Peoples Pictures, MGR Sivaji Rajini Kamal Press Meet Event Photos.
 
நடிகை வனிதா தயாரிக்கும் படத்தில் அவரது பாய் பிரண்ட் ராபர்ட் ஹீரோவாக நடிக்கிறார்.விஜயகுமார்-மஞ்சுளா மகள் வனிதா. ஆகாஷ் என்பவரை மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்றார். இதையடுத்து ராஜன் ஆனந்த் என்பவரை மறுமணம் செய்தார். அவருடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தார். விஜய் ஸ்ரீஹரி, ஜெனிதா ஆகிய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

வனிதாவுக்கும் நடன இயக்குனர் ராபர்ட்டுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இருவரும் ஜோடி சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றனர். ஏற்கனவே ‘அழகன்‘ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் ராபர்ட். தற்போது அவரை ஹீரோவாக வைத்து சொந்த படம் தயாரிக்கிறார் வனிதா. அப்படத்துக்கு ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி வனிதா கூறியது:நான் தயாரிக்கும் இப்படத்தை என் அம்மா(மஞ்சுளா) குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்திருக்க வேண்டும். அவர் மறைந்துவிட்டார். அவரது படத்துக்கு விளக்கு ஏற்றிவைத்து படத்தை தொடங்குகிறேன். என் தந்தை விஜயகுமார் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வரவில்லை.
 
எம்ஜிஆர், சிவாஜி ரஜினி கமல் ஆகியோருடன் எனது பெற்றோருக்கு நல்ல பழக்கம். அவர்களது படங்களில் நடித்தும் இருக்கின்றனர். எனவேதான் இந்த தலைப்பை தேர்வு செய்தேன். ராபர்ட் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார். ராம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சரவணன் பிள்ளை ஒளிப்பதிவு. இவ்வாறு வனிதா கூறினார்.






















Comments