இயக்குனர் உருவ பொம்மை எரித்து ஸ்ரீதேவி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!!!

13th of october 2014
சென்னை:இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் உருவ பொம்மையை எரித்தனர் ஸ்ரீதேவி ரசிகர்கள்.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை இயக்கியுள்ளவர் ராம் கோபால் வர்மா. ஒவ்வொரு படத்திலும் சர்ச்சைக்குரிய கதைகளை தொட்டு பிரச்னையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தற்போது அவர் இயக்கி இருக்கும் டோலிவுட் படத்துக்கு ஸ்ரீதேவி என பெயரிட்டிருக்கிறார். இதற்காக ஆசிரியை ஒருவரை மாணவன் காம கண்ணோட்டத்துடன் பார்ப்பதுபோன்ற ஆபாசமான போஸ்டர்களை ஒட்டினார்.

இது எந்தளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதே அளவுக்கு சிக்கலையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.ஏற்கனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ‘தன் பெயரை கெடுக்கும் விதமாக ஆபாச படத்துக்கு தனது பெயரை தலைப்பாக வைத்தது தவறு. அதற்காக இயக்குனர் வர்மா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அப்பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைத்துக்கொள்ளவேண்டும் என்று 2 நாட்களுக்கு முன் நடிகை ஸ்ரீதேவி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
 
இதையடுத்து ஆந்திராவில் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் வர்மாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் ராம் கோபால் வர்மாவின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Comments