தமிழில் விஷால் படம் தெலுங்கில் ஸ்ருதி படம்!!!

27th of October 2014
சென்னை:
ஹரி இயக்கத்தில் விஷால் ஸ்ருதி ஜோடியாக நடித்திருக்கும் பூஜை படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது விஷால் நடித்திருக்கும் படங்களிலே பூஜை படம் தான் அதிக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது .
 
இப்படம் தமிழகத்தை விட ஆந்தரா திரையரங்குகளில்தான் அதிகமாக வெளியிட்டுயிருக்கிறார்கள் தமிழில் பூஜை என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இப்படம் தெலுங்கில் பூஜா என்ற பெயரில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்துக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களிடம்தான் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது ஆந்திராவை சேர்ந்த இவருக்கு அங்கு நல்ல மார்க்கெட் கிடையாது இருந்தாலும் இவர் நடித்திருக்கும் சில தமிழ் படங்களை தெலுங்கில் டப் செய்யபட்டு இருக்கிறது.
 
ஆனால் இதுவரை டப் செய்யபட்டு இருக்கும் படங்களிலேயே பூஜை படம் தான் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது அதற்க்கு காரணம் ஸ்ருதி தான் என்கிறார்கள் ஸ்ருதி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் தெலுங்கில் இவர் நடித்திருக்கும் எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
 
அந்த வகையில்தான் தெலுங்கில் பூஜா படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது என்கிறார்கள்.
 
தமிழில் பூஜை படத்தை விஷால் படம் என்கிறார்கள் ஆந்திராவிலோ ஸ்ருதி படம் என்கிறார்கள்.

Comments