24th of October 2014
சென்னை:சமீப காலாம் உலகம் முழுவதும் மக்களிடம் இருந்து பணத்தை திரட்டி அதன் மூலம் பல படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வெற்றிகரமாக வெளியீட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இந்திய சினிமாவுக்காக பிரத்யேகமான ஒரு அமைப்பை தமிழ் சினிமா இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜெய்லானி தொடங்கியுள்ளார். இவருடன், சமீபத்தில் வெளியான 'சிநேகாவின் காதலர்கள்' படத்தின் இயக்குனர் முத்துராமலிங்கன் இணைந்து இந்த அமைப்பின் மூலம் தனது அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
சோனா நாயகியாக நடித்த 'கேள்விகுறி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி அதில் நாயகனாகவும் நடித்தவர் தான் ஜெய்லானி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவான இப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியானது.
இந்த நிலையில், தனது முதல் படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜெய்லானி, தற்போது மூவி ஃபண்டிங் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம், தமிழ் சினிமாவில் உள்ள படைப்பாளிகளுக்கு புதிய பாதையை ருவாக்கியுள்ளார்.
அயல்நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இத்தகைய அமைப்புகளின் மூலம் பல்வேறு படைப்புகள் உருவாகியுள்ளன.
இந்த மூவி ஃபண்டிங் , நிறுவனத்தில் ஒருவர் தங்களுடைய கதை பற்றிய விபரங்களை தெரிவித்து, அவற்றை படமாக்க இவ்வளவு பட்ஜெட் தேவைப்படும் என்ற விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். பிறகு உங்கள் படத்திற்கு தேவைப்படும் பஜெட்டை, எத்தனை பேர் கொடுக்கலாம் என்பதையும் நீங்களே தெரிவிக்க வேண்டும். ஒரு படத்திற்கு பட்ஜெட் 60 லட்சம் என்றால், அதை 30 நபர்கள் தலா 2 லட்சம் விதமாக கொடுத்தாலும் பரவாயில்லை என்று விருப்பம் உள்ளவர்களுக்கும் சரி, தலா 15 லட்சம் விதம் நான்கு பேர் கொடுத்தாள் போதும், என்று விரும்பவர்களும் சரி, அவர்களுக்கு எற்ற முதலீட்டார்களை இந்த மூவி ஃபண்டிங்.
அப்படி தேர்ந்தெடுக்கும் முதலீட்டளர்கள், படைப்பாளிகள், மூவி ஃபண்டிங் நிறுவனம் இந்த மூவருக்கும் இடையே நியாயமான ஒரு அக்ரிமெண்டுடன், படைப்பாளியின் கதை படமாக்கப்படும். முதலீட்டளர்கள் கொடுக்கும் பணத்தை மூவி ஃபண்டிங் நிறுவனத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பு அனுபவம் உள்ளவர்கள் கையாண்டு, குறிப்பிட்ட பட்ஜெட்டில் படத்தை முடிப்பார்கள்.
தற்போது, இந்த அமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஜெய்லானி இயக்கம் 'சவுண்ட் கேமரா ஆக்ஷன்' என்ற படமும், முத்துராமலிங்கன் இயக்கம் 'ரூபச்சித்திர மாமரக் கிளியே' ஆகிய இரண்டு படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே குறுகிய கால குறைந்த பட்ஜெட் படங்களாகும்.

Comments
Post a Comment