ஒரே நாளில் ‘லிங்கா’ படத்தின் டப்பிங்கை முடித்த ரஜினிகாந்த்!!!

21st of October 2014
சென்னை:கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் லிங்கா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டது. டப்பிங்கில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த், தான் பேச வேண்டியவைகளை 24 மணி நேரத்தில் பேசி முடித்துள்ளார். டப்பிங் பணியின்போது அதிகம் அவர் ஓய்வு எடுக்கவில்லையாம். இடையில் 5 நிமிடம், 10 நிமிடம் என்று மட்டும் ஓய்வு எடுத்து விட்டு தொடர்ந்து பேசினாராம்.

ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Comments