செல்ல பிராணிகளுடன் தீபாவளியை கொண்டாடினார் த்ரிஷா!!!

24th of October 2014
சென்னை:நடிகை த்ரிஷா செல்ல பிராணிகள் மீது அதிக அக்கறை காட்டுபவர் அதிலும் தெரு நாய்களை வளர்ப்பதிலும் , பாதுக்காப்பதிலும் ரொம்பவே அதிக அக்கறை காட்டுபவர்.
த்ரிஷா தான் வளர்க்கும் நாய்குட்டிகளுக்காக தீபாவளியன்று பட்டாசு கூட வெடிப்பதில்லையாம்.
 
இது குறித்தி அவர் கூறியதாவது : எனக்கு தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது எல்லாம் சுத்தமா பிடிக்காது, ஏனென்றால் பட்டாசு வெடிக்கும் போது காற்று மாசுபடுகிறது மற்றும் ஒலி மாசும் உண்டாகிறது , அதனால் எனக்கு பட்டாசு வெடிப்பது சுத்தமா பிடிக்காது , அதுவும் இல்லாமல் நாய்களுக்கு மனிதர்களை விட செவித்திறன் அதிகம் ,

அதனால் பட்டாசு சத்தம் கேட்டால் நாய்கள் ரொம்பவே பயப்படும். நாம்ம சந்தோசமாக இருக்கருக்காக வாயில்லா ஜீவன்களை எதுக்காக கஷ்டபடுத்தனும்னு, நான் தீபாவளியன்று பட்டாசே வெடிக்கமாட்டேன் , அந்த நாள் முழுக்க என்னுடைய செல்ல நாய்க்குட்டிகளோடு வீட்டுக்குள்ளையே ஜாலியாக விளையாடி மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.

Comments