நண்பேண்டா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!!!

24th of October 2014
சென்னை:இது கதிர்வேலன் காதல்’ திரைப்படத்தில் நயந்தராவுடன் ஜோடி போட்ட உதயநிதி, அடுத்ததாக ‘நண்பேண்டா’ படத்தில் நயந்தராவுடன் இணைந்திருக்கிறார். இயக்குநர் ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தது.

உதயநிதி-நயந்தரா இடம்பெறும் இந்த பாடல் லண்டனில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதையடுத்து லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ள நண்பேண்டா படக்குழுவி, விரைவில் படத்தின் பின்னணி வேலைகளில் ஈடுபட உள்ளது. இது முடிந்ததும் படத்திற்கான வெளியீட்டு தேதியை அறிவிக்கப்பட உள்ளனர்.

Comments