13th of october 2014
சென்னை:சத்தமில்லாமல் நடக்கும் மணிரத்னம் பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார் நித்யா மேனன்.‘கடல் படத்தையடுத்து மணிரத்னம் இயக்கும் படம்பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் சத்தமில்லாமல் பட ஷூட்டிங்கை தொடங்கினார். இதுபற்றி பட நாயகி நித்யா மேனன் கூறியது:
2 மாதத்துக்கு முன்பே மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகிவிட்டேன். ஆனால் வேறு நடிகைகளின் பெயர்கள் கூறப்பட்டு வந்தது. இப்படத்துக்காக இயக்குனரை சந்தித்தபோது அவரும் அதிகம் பேசவில்லை, நானும் அதிகம் பேசவில்லை. இதுவொரு காதல் கதை வரும் டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு முடியும். எப்போதுமே நான் வாழ்க்கையில் இப்படித்தான் செய்யவேண்டும் என்று திட்டமிடுவதில்லை. அதுபோல்தான் மணிரத்னம் படமும் அமைந்தது. திறமையான ஒரு இயக்குனருடன் பணியாற்றுவது சந்தோஷம். இதன் ஷூட்டிங் தொடங்கி 5 நாட்கள் ஆகிவிட்டது.
மணிரத்னம் தனது படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகளை மிகவும் சவுகரியமாக பார்த்துக்கொள்கிறார். இயற்கையாகவே நல்ல நடிப்பை தர வேண்டும் என்றே எல்லா நடிகர், நடிகைகளும் விரும்புவர். மணிரத்னம் படத்தில் நடிப்பதால் திரையிலும் அதற்கான பலன் கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட முறையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.இவ்வாறு நித்யா மேனன் கூறினார். இதில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார்.
Comments
Post a Comment