9th of October 2014
சென்னை:கார்த்தி நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மெட்ராஸ்’ படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த நிலையில்,மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எவிடென்ஸ் என்ற அமைப்பு ‘மெட்ராஸ்’ படத்திற்கு சமூக மாற்றத்துக்கான படைப்பு என்ற விருதை அறிவித்துள்ளது.
பல்வேறு சமூக பிரச்னைகளை கையிலெடுத்து போராடி வரும் எவிடென்ஸ் அமைப்பு, ஆண்டுதோறும் சமூக மாற்றத்துக்காக போராடும் படைப்பாளிகளுக்கு விருது வழங்கியும் கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மெட்ராஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.
இது குறித்து எவிடென்ஸ் அமைப்பு கூறுகையில், “மெட்ராஸ் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அப்பாவி இளைஞர்களை அரசியல்வாதிகள் எப்படி தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்பதையும், சென்னையின் அடித்தட்டு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த படம்
எங்கள் அமைப்பின் பிரச்சார கருவியாக இருப்பதால் இந்த ஆண்டு சமூக மாற்றத்துக்கான படைப்பு விருதை மெட்ராஸ் படத்தின் இயக்குநர் ரஞ்சித்துக்கு வழங்குகிறோம். வருகிற 25ஆம் தேதி மதுரையில் நடக்கும் விழாவில் விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment