27th of October 2014
சென்னை:வடிவேலு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் தமிழ்
சினிமாவுக்கு ரீ-என்ட்ரி ஆனார். இப்படத்தை யுவராஜ் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிறகு ‘எலி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தையும் யுவராஜே இயக்குகிறார்.
இப்படத்தை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதை எழுதும் பணியை இயக்குனர் யுவராஜ் முடித்துவிட்டார். இந்த கதை வடிவேலுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டதாம்.
வடிவேலு இந்த படத்தில் உளவாளியாக நடிக்கிறாராம். 1960-களில் நடக்கும் கதையாக உருவாகவிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனர். தற்போது, வடிவேலுவுக்கு கதாநாயகி தேடும் பணி நடக்கிறது. மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை ஓஹோ பிக்சர்ஸ் சார்பில் ஜி.ராம்குமார் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டா தரணி கலையையும், ராஜா முகம்மது எடிட்டிங்கையும் கவனிக்கிறார்கள்.

Comments
Post a Comment