விஜய்க்கு குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிலை!!!

27th of October 2014
சென்னை:
விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்து அதை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் திறந்து வைத்துள்ளனர்.

இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
கத்தி படம் நல்ல வசூல் செய்து வரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் தளபதியை சிலையாக வடித்துள்ளனர்.
 
ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்தபடி அதாவது தலைவா படத்தில் வரும் விஷ்வாபாய் கதாபாத்திரம் போன்று உள்ளது விஜய்யின் சிலை.
இந்த சிலை திறப்பு விழா இன்று சென்னை, குரோம்பேட்டையில் நடைபெற்றது. மக்கள் பார்க்கும் வகையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். தங்கள் தளபதி சிலையுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர் ரசிகர்கள்.

Comments