13th of october 2014
சென்னை:விஜய் - சமந்தா நடித்த கத்தி படத்துக்கு யு சான்றும், விஷால் - ஸ்ருதி நடித்த பூஜை படத்துக்கு யு ஏ சான்றும் தணிக்கைக் குழுவில் கிடைத்துள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படம் தீபாவளியன்று வெளியாகிறது. இந்தப் படம் நேற்று முன்தினம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று தந்துள்ளனர். இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படத்தை அக்டோபர் 22-ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடுவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் விஷால் - சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு வரும் மற்றொரு படமான பூஜைக்கு யுஏ சான்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் காரணமாக இப்படி சான்றளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
யுஏவை ஏற்பதா அல்லது மறுபரிசீலனைக்கு அனுப்புவதா என்பது குறித்து இன்று முடிவு செய்கிறார்கள் விஷாலும் ஹரியும். இந்தப் படமும் திட்டமிட்டபடி அக்டோபர் 22-ம் தேதி வெளியாகிறது.
Comments
Post a Comment