ராம்கோபால் வர்மாவின் சாவித்ரி படத்தின் ஆபாச போஸ்டர்!!!

8th of October 2014
சென்னை:எதையாவது எழுதியும், பேசியும் அவ்வப்போது பரபரப்பு பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறவர் ராம்கோபால் வர்மா. 

தற்போது அவர் இயக்கி வரும் தெலுங்கு படமான சாவித்ரி படத்தின் போஸ்டரிலும் ஆபாச பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.  1980களில் வந்த காலைக் காட்சி மலையாளப்பட ரேன்ஞ்சில் அவரது சாவித்ரி பட போஸ்டர்கள் அமைந்திருக்கிறது.

 
ஒரு பெண்ணின் பின் பகுதியையும், தொப்புளையும் ஒரு சிறுவன் கிரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதுபோன்று அந்த போஸ்டர்கள் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டருக்கு ஆந்திராவில் உள்ள மனித உரிமை கமிஷன், சிறுவர்கள் நல அமைப்பு ஆகியவற்றிடம் இருந்து கண்டன குரல்கள் வந்திருக்கிறது.

ஆனால் இதையெல்லாம் அவர் கண்டு கொள்வதாக இல்லை. "எனது சொந்த அனுபவங்களிலிருந்து நான் உருவாக்கியவை அவை. எனது கிரியேட்டிவ்க்குள் தலையிட யாருக்கும் உரிமையில்லை" என்கிறார் கூலாக.

Comments