சதம் அடித்தார் வி.ஐ.பி!!!

26th of October 2014
சென்னை:தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெற்றிகரமாக 1௦௦வது நாளை எட்டியுள்ளது.. தனுஷுக்கு இது 25வது படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காரணம் 2௦ வருடங்களுக்கு முந்தைய நடிகர்கள் தங்களது 1௦௦வது படத்தை நிறைவு செய்வது போன்ற ஒரு சாதனை போலத்தான் இதுவும்.
 
செண்டிமெண்ட் அம்மா சரண்யா, கண்டிப்பான தந்தை சமுத்திரகனி, மைன்ட் வாய்ஸ் காமெடி விவேக் என இந்தப்படத்திற்கு அமைந்திருந்த கேரக்டர்கள் அனைவருமே படத்தின் இயல்புத்தன்மை கெடாமல் தங்கள் பங்களிப்பை தந்திருந்தனர். கதாநாயகி அமலாபாலே இந்தப்படத்தில் அனைவரையும் ஈர்க்கும் விதமாக சிறப்பாக நடித்திருந்தார்.

பொறியியல் படித்துவிட்டு அது சாராத மற்ற எந்த வேலைக்கும் போக விரும்பாத தனுஷின் நேர்மையான கதாபாத்திரம் தான் இந்தப்படத்தை தூக்கி நிறுத்தியது என்றால் அது மிகையாகாது. அதுதான் அவரது 25வது படத்தை வெற்றிப்படமாகவும் மாற்றியது.
 
தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் இந்தப்படத்தின் மூலம் டைரக்‌ஷனில் தனது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைத்திருக்கிறார். அடுத்த அடியை கவனமாக எடுத்துவைப்பதில் தான் அவரது பயணம் தடங்கல் இல்லாமல் செல்லும் என்பதை வி.ஐ.பியின் வெற்றி அவருக்கு உணர்த்தியிருக்கும்.

Comments