15th of October 2014
சென்னை:தமன்னா படப்பிடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு ஒரு மாதம் ஓய்வு எடுக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கடந்த சில மாதங்களாக தமன்னா தொடர்ந்து நடித்து வந்தார். இதனால் குடும்ப நிகழ்ச்சிகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. உறவினர்களின் திருமணங்கள், தோழிகள் வீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் அவரால் போக முடியவில்லை.
இதனால் உறவினர்கள் மத்தியில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. தமன்னாவுடன் பேசுவதையும் பலர் நிறுத்தி விட்டார்கள். எனவே குடும்பத்தினருக்காகவும் உறவினர்களுக்காகவும் ஒரு மாதம் ஒதுக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது இந்தி, தெலுங்கில் ஓய்வில்லாமல் நடித்து வந்த படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைக்கும்படி கோட்டுக் கொண்டு உள்ளார். ஒரு மாத ஓய்வில் தினமும் உறவினர்கள், தோழிகள் வீட்டுக்கு செல்வது மற்றும் அவர்களுடன் கலந்துரையாடல் விருந்து நிகழ்ச்சிகள் நடத்துவது என இருக்கப் போகிறாராம்.
ஒரு மாதம் ஓய்வை முடித்து விட்டு அடுத்த மாதம் இறுதியில் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறார். அடுத்த வருடம் கோடை விடுமுறை வரை தொடர்ந்து படங்களில் நடிக்க உள்ளார். தமிழில் ஆர்யா ஜோடியாக புதுபடத்தில் நடிக்கிறார்.

Comments
Post a Comment