15th of October 2014
சென்னை:விஷால் - சுருதி ஹாசன் நடிக்கும் 'பூஜை' படத்தை இயக்கியுள்ள ஹரி, அடுத்ததாக சூர்யாவுடன் இணையப் போகிறார்.
விஷால் - சுருதி ஹாசனை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் 'பூஜை'. தீபாவளியன்று இப்படம் வெளியாகிறது.
இதற்கிடையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது,"‘பூஜை’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை. இப்படம் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதை இப்போது சொல்லமுடியாது." என்றார்.
அஜித்-விஜயை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு, "எனக்கு அனைத்து நடிகர்களுடன் பணியாற்ற ஆசையாக தான் இருக்கிறது. அஜித் மற்றும் விஜய்க்கு என்னிடம் இப்போதும் கதைகள் இருக்கிறது. அவர்கள் சம்மதிக்க வேண்டும், மேலும் அவர்களை வைத்து படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் என்னை இயக்குனராக்க முடிவு செய்ய வேண்டும்,
இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. இவை அனைத்தும் ஒன்றாகி வரும் நேரத்தில் கண்டிப்பாக அவர்களை வைத்து படம் இயக்குவேன், அவர்களை வைத்து படம் இயக்க நான் ரெடியாகத் தான் இருக்கிறேன்." என்று பதிலளித்தார்.

Comments
Post a Comment