மோகன்லால் வெப்சைட்டில் பாகிஸ்தான் தேசியகொடி!!!

8th of October 2014
சென்னை:நடிகர் மோகன்லால் இணைய தளம் பக்கத்தை சிலர் முடக்கி வைத்துள்ளனர். அதை திறந்தால் பாகிஸ்தான் கொடி பறக்கிறது.நடிகர், நடிகைகள் தங்களுக்கென இணைய தள பக்கங்களை வைத்துள்ளனர். இணையதளங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அன்றாட நிகழ்வுகள்பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்வதுடன் தங்களது புதிய பட அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். விஷமிகள் சிலர், நட்சத்திரங்களின் பெயர்களை பயன்படுத்தி தாங்களே வலைதள பக்கங்களை உருவாக்குகின்றனர்.

அதில் எதிர் கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இது சர்ச்சையாகும்போது குறிப்பிட்ட நடிகரோ, நடிகைக்கோ தன் பெயரை யாரோ தவறாக பயன்படுத்தும் விஷயம் கவனத்துக்கு வருகிறது. அதனை முடக்கும்படி போலீசில் புகார் செய்கின்றனர். ஆனால் சிலரின் இணைய தள பக்கங்கள் முடக்கப்பட்டு அதை தாங்கள்தான் முடக்கி வைத்திருக்கிறோம் என்று தீவிரவாத அமைப்புகள் பெயரில் அதேபக்கத்தில் தகவல் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றனர்.
 
நடிகர் மோகன்லாலின் இணைய தள பக்கத்தை யாரோ சமீபத்தில் முடக்கி உள்ளனர். அதை திறந்தால் பாகிஸ்தான் கொடி பறக்கிறது. சுதந்திர காஷ்மீர் கேட்டு முடக்கி உள்ளோம் என்ற வாசகத்தை பதிவு செய்துள்ளனர். இது மல்லுவுட் நடிகர்கள் வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments