ஆர்யாவுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!!!

27th of October 2014
சென்னை:
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் நடித்த ஆர்யா, மீண்டும் அவருடன் ‘யட்சன்’ படம் மூலம் இணைந்திருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவுடன், விஷ்ணு வர்தனின் தம்பியான நடிகர் கிருஷ்ணாவும் இணைந்து நடிக்கிறார்.

யுடிவி நிறுவனத்துடன், தனது சொந்த நிறுவனமான விஷ்ணு வர்தன் பிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து விஷ்ணு வர்தன் இப்படத்தை தயாரிக்கிறார்.


இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறாராம். ஆர்யா, எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் சென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் நடைபெற்றது.

Comments