இண்டர்நெட்டை கலக்கிய அஜீத் படம்!!!

24th of October 2014
சென்னை:அஜீத் ஒரு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகராக மட்டும் இருந்ததில்லை. மோட்டார் பைக் ரேஸ், கார் பந்தயம் ஆகியவற்றிலும் அவ்வப்போது கலந்து கொண்டு அந்த துறையிலும் வல்லவர் என்பதை அவர் நிரூபித்து வந்துள்ளார். இந்நிலையில் அஜீத் ஒரு சிறந்த போட்டோகிராபர் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

அஜீத்தின் ரசிகர்கள் சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் அஜீத் போட்டோகிராபி' என்ற பெயரில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து அதில் அஜீத் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு தேர்ச்சி அடைந்த புகைப்படக்கலைஞர் எடுக்கும் புகைப்படம் எப்படி தரமானதாக இருக்குமோ அவ்வாறு அஜீத் எடுத்த புகைப்படங்கள் இருப்பது கண்டு அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி, அவரை பிடிக்காதவர்களும், அவர் எடுத்த புகைப்படங்களை பாராட்டி வருகின்றனர். மேலே நீங்கள் பார்க்கும் இந்த புகைப்படம் அஜீத் தன்னுடைய கேமராவில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் திரைப்படங்கள் மட்டுமின்றி அவரது புகைப்படமும் இண்டர்நெட்டில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது.

Comments