சாருக்கு பிடிச்ச ஹீரோயின கொடுங்க” - சிவகார்த்திகேயனுக்காக சண்டைப்போடும் மேனஜர்!!!

27th of October 2014
சென்னை:சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன், ஒரு சில படங்களிலேயே வசூல் நாயகனாக உருவெடுத்துவிட்டார். அவருடைய இந்த முனேற்றம் பல ஹீரோக்களை கடுப்பாக்கியது ஒரு பக்கம் என்றால், தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ அலம்பல் பலரையும் கடுபாக்கி வருகிறது.

தற்போது டாணா என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். எதிர் நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.


தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஆரம்ப கட்டத்தின் போது, ஸ்ரீதிவ்யாவை நாயாகியாக்கியதற்கு சிவகார்த்திகேயனின் மேனஜர் எதிர்ப்பு தெரிவித்தாராம். “ஹீரோவுக்கு பிடித்த நடிகைகளை ஹீரோயினாக போடாமல், ஏன் ஸ்ரீதிவ்யாவை போட்டீர்கள்” என்று தயாரிப்பு தரப்பிடம் சண்டைப்போட்டாராம். மேலும் நயந்தாரா அல்லது தமன்னா இருவரில் ஒருவரை நாயகியாக்குங்கள் என்றும் கூறினாராம்.

இதனை அறிந்த தனுஷ், சிவகார்த்திகேயனை அழைத்து, புத்திமதி சொல்லி சமாதானப்படுத்தினாராம்
.

Comments