பிரேம்ஜி அமரனுக்கு விரைவில் கல்யாணம்!!!

24th of October 2014
சென்னை:இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி பல படங்களில் காமெடியனாக நடித்து விட்டார், இவர் ஞாபகம் வருதே , துணிச்சல் , நெஞ்சத்தை கிள்ளாதே , என்னமோ நடக்குது, தோழா சில படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

மான்க என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் , 36 வயதான இவர் கல்யாணம் செய்துகொள்ளாமல் காலத்தை தள்ளி போட்டு கொண்டே இருக்கிறார் என்ற ஒரு பேச்சு இவர் மீது உள்ளது , இவர் சமிபத்திய ஒரு பேட்டியில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் ஆனால் அது அந்த பெண்ணுக்கு தெரியாதுன்னு வெளிப்படையாக சொல்லியிருந்தார், ஆனால் அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை ஒரு செய்தியும் வெளி வரவில்லை .

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் பிரேம்ஜிக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவு செய்திருக்கிறார்கள், பொண்ணு கூட ரெடியாம், விசாரித்ததில் ஒரு பிரபல நடிகரின் மகளாம்.
எது எப்படியோ பிரேம்ஜிக்கு கல்யாணம் மட்டும் உறுதி.

Comments