'மாரீசன்' விஜய்யின் அடுத்தப்படத்தின் தலைப்பு?!!!

11th of October 2014
சென்னை:கத்தி படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்கின்றனர். 

நான் ஈ புகழ் சுதீப்பும், நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தை விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமாரும்,

தமிழ்ப்படங்களை கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான தமீன் ரிலீஸ் நிறுவனத்தின் ஷிபுவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு இதுவரை அதிகாரபூர்வமாக டைட்டில் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்திற்கு மாரீசன் என்ற தன் பழைய டைட்டிலை இயக்குனர் சிம்புதேவன் சூட்டி இருப்பதாக ஒரு தகவல் அடிபடுகிறது.

2011 ல் தனுஷை வைத்து இயக்கவிருந்த படத்திற்காக மாரீசன் என்ற இந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்தார் சிம்புதேவன். அதை தற்போது பயன்படுத்த இருக்கிறாராம்.

Comments