தெலுங்கிலும் கவனம் செலுத்த விரும்பும் ஸ்ரீ திவ்யா!!!

24th of October 2014
சென்னை:ஸ்ரீ திவ்யா தெலுங்கு திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக தன் திரை உலக வாழ்கை பயணத்தை தொடங்கினர் பின் 2010 ஆம் ஆண்டு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.
 
அவரது தாய் மொழியான தெலுங்கில் இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் எந்த படமும் பேர் சொல்லும் அளவு இல்லை.
 
அதனால் தமிழில் நடிக்க ஆரம்பித்தார் அவர் தமிழில் முதலில் வித்தார்த்துக்கு ஜோடியாக காட்டுமல்லி என்ற படத்தில் தான் நடித்தார் ஆனால் அப்படம் எதோ சில காரணங்களால் பாதிலேயே நின்றுவிட்டது.

பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார் தற்போது கைவசம் 6,7 படங்களை வைத்திருக்கிறார் இந்த நிலையில் தெலுங்கில் அடுத்த மாதம் இவர் நடிப்பில் வாரதி என்ற படம் ரிலிசாக உள்ளதாம் அதுபோக இன்னும் இரண்டு படங்களில் கமிட்டாகி இருக்கிறாராம்.
வாரதி படம் நல்ல வரவேற்ப்பை பெற்றால் தெலுங்கு படங்களில் நடிக்கவும் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் உதா கலர் ரிப்பன் ஸ்ரீ திவ்யா.

Comments