சென்னை:தற்போது இயக்குனர் சமுத்திரகனி ‘கிட்ணா’ என்ற படத்தை இயக்குவதுடன் அதில் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை முதலில் தமிழ், மலையாளத்தில் மட்டும் எடுக்கிறார். இரண்டிலும் இவரே நடிக்க, கன்னடத்தில் இவரது கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் கிஷோர். தெலுங்கிற்கு மட்டும் நடிகரை தேடிக்கொண்டு இருக்கிறார் கனி.
நான்கு மொழிகளிலுமே தன்ஷிகா தான் கதாநாயகி.. இந்தப்படத்தில் முதன் முறையாக ஒரு புதுமையை புகுத்துகிறார் சமுத்திரகனி.. அதாவது இந்தப்படத்தை இரண்டேகால் மணி நேரம் ஓடும் விதமாகவும், மூன்று மணி நேரம் ஓடும் விதமாகவும் இரண்டு வெர்ஷன்களில் எடுக்கிறார். இரண்டிலுமே கதையும் கிளைமாக்ஸும் ஒன்றுதான்.. காட்சிகள் மட்டும் இரண்டுக்கும் சற்று மாறுபட்டு இருக்கும்.
படம் வெளியாகும்போது குறைவான நேரம் உள்ள படம் 1௦௦ தியேட்டர்களில் வெளியானால், மூன்று மணி நேரம் ஓடும் படத்தை 5௦ தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதாக பிளான் வைத்திருக்கிறார் கனி. சினிமாவை ரசித்து பார்ப்பவர்களுக்காகவும் குறிப்பாக உலக திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காகவும் தான் இந்த மூன்றுமணிநேர படமாம்.
Comments
Post a Comment