15th of October 2014
சென்னை:சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே பரபரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இதற்கு காரணம் படத்துக்குப்படம் அவர் காண்பித்து நடித்த கிளாமர்தான். அதன்காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய ஸ்ருதிஹாசன், தமிழைப் பொறுத்தவரை அடக்கியே வாசித்து வருகிறார். 3, ஏழாம் அறிவு படங்களைத் தொடர்ந்து இப்போது விஷாலுடன் நடித்துள்ள பூஜையிலும் பெரிய அளவில் அவர் வெடித்து சிதறவில்லை என்றே கூறப்படுகிறது.
அதனால் இந்தி, தெலுங்கு படங்களில் வாரி வழங்கும் நீங்கள் தமிழுக்கு மட்டும் எதற்காக துரோகம் செய்கிறீர்கள்? என்று அவரைக்கேட்டால், நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது நானல்ல. கதைதான். அப்படித்தான் இதுவரை நடித்து வருகிறேன். அந்த வகையில், இந்தி, தெலுங்கில் பக்கா கமர்சியல் கதைகளாக எனக்கு கிடைத்து வருகின்றன. அதனால் அதற்கேற்ப நான் மாறி நடிக்கிறேன்.
மற்றபடி தமிழ் ரசிகர்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எனக்கில்லை. மேலும், கடந்த காலங்களில் சில படங்களில் கிளாமரில் நான் ஓவர்டோஸ் கொடுத்து விட்டதாக புகார்கள் எழுந்தன. அதனால் இனிமேற்கொண்டு ஒரு ஸ்கேல் வைத்தே நடிக்க முடிவு செய்திருக்கிறேன். சர்ச்சைகள், அதிருப்தியில் இருந்து விடுபட்டு அனைவரும் விரும்பும் நடிகையாக மாற வேண்டும் என்பதே எனது இப்போதைய எண்ணமாக உள்ளது என்று கூறும் ஸ்ருதிஹாசன், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தியிலும் இந்த அளவுகோலை கடைபிடிக்கப் போவதாகவும் சொல்கிறார்.

Comments
Post a Comment