விக்ரமை பார்த்து மிரண்டு போன சிவகார்த்திகேயன்!!!

22nd of October 2014
சென்னை:வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சிவகார்த்திகேயன் இவர் நடித்திருக்கும் படங்கள் எல்லாம் காமெடியும் ,காதலும் கலந்த கதைதான் ,
 
சிவகார்த்திகேயன் மான்கராத்தே படத்தின் மூலம் கொஞ்சம் காமெடியும் ஆக்சன் கலந்த கதையில் நடித்திருந்தார்.
இவர் தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் டாணா படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருக்கிறார்.

இப்படத்துக்காக சில மாதங்கள் ஜிம்னாஸ்டிக்கெல்லாம் சென்று தான் உடல் எடையை மாற்றியிருக்கிறார் இதை ஒரு பெரிய விஷயம் போல் கருதினார் , ஆனால் ஐ டிசரில் வரும் விக்ரமின் தோற்றத்தை பார்த்து மிரண்டு போயிருக்கிறார் .
 
இது குறித்து சமிபத்திய ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன்:  நான் எனது டாணா படத்துக்காக ரொம்ப கஷ்டபட்டதாக நினைத்தேன் ஆனால் விக்ரம் சாரின் ஐ படத்தின் டிசரை பார்த்தால் தான் தெரிகிறது நானெல்லாம் ஒன்றும் இல்லை என்று , அவர் ஒவ்வரு கேட்டப்புக்கும் எவ்வள்ளவு உழைத்திருக்காருனு ஒரு நடிகனாக என்னால் உணரமுடிகிறது அவர்மீது உள்ள மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது என்று மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறியிருந்தார்.

Comments