அஜீத் ரியல் ஹீரோ - அருண் விஜய் பாராட்டு!!!

12th of October 2014
சென்னை:கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிப்படாத படத்தில், முதன் முதலாக அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் தான் பணி புரிந்த அனுபவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அருண் விஜய், "அஜீத்தை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன்.


ஆனால் நெருங்கி பழகினது இல்லை. அவருடன் பழகியதில் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார். அவர் எதையும் போலியாக செய்ய மாட்டார். அவருடைய ஒவ்வொரு செயலையும் நான் நேசிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

சிம்புவையே மிஞ்சுடுவார் போலிருக்கே...

Comments