ரசிகரின் மறைவிற்கு விஜய் இரங்கல்!!!

24th of October 2014
சென்னை:பல தடைகளை தகர்த்தெறிந்து வெற்றிகரமான ரிலீஸான 'கத்தி' படத்தின் வெற்றியாலும், குவிந்து வரும் வசூலாலும் பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த இளைய தளபதி விஜய்க்கு, தனது கேரள ரசிகர் ஒருவர் அகால மரணம் அடைந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது.

கேரளாவில் கத்தி படத்தின் ரிலீஸ் நாளில் உன்னிகிருஷ்ணன் என்ற ரசிகர்கள் விஜய்யின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது தவறி விழுந்து மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து உன்னி கிருஷ்ணனின் குடும்பத்திற்கு விஜய் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள இரங்கல் அறிக்கையில், 'உன்னிகிருஷ்ணனின் மரணம் என்னை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய ரசிகர் ஒருவரின் இழப்பு எனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். எனது ரசிகரகளுக்கு நான் மிகவும் வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் எனது படங்களின் ரிலீஸின் மீது உங்கள் உயிரை பணயம் வைத்து எந்தவித காரியங்களிலும் ஈடுபட வேண்டாம்.

 
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொண்டு ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள். அல்லது இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாமல் சந்தோஷத்தை மட்டும் கொண்டாடுங்கள். எனது படத்தின் வெற்றியை விட, கொண்டாட்டத்தை விட எனக்கு ரசிகர்களின் உயிர் மிகவும் முக்கியமானது' என்று தெரிவித்துள்ளார்.

Comments