21st of October 2014
சென்னை:
சென்னை:
4. யான்
ரவி.கே.சந்திரனின் முதல் இயக்குனர் முயற்சியான இந்தப் படம் அவருக்கு எந்த
புகழையும் சேர்க்கவில்லை. சென்ற வார இறுதியில் 5.2 லட்சங்களை வசூலித்த படம்
இதுவரை 1.45 கோடியை தனதாக்கியுள்ளது.
3. ஜீவா
சென்ற வார இறுதியில் சுசீந்திரனின் படம் 6.9 லட்சங்களை வசூலித்து
நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை சிட்டி வசூல்
1.02 கோடி.
2. அரண்மனை
சுந்தர். சியின் படம் சத்தமில்லாமல் வசூலை குவிக்கிறது. இந்தப் படம் சென்ற
வார இறுதியில் 12.5 லட்சங்களை வசூலித்து இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரை சென்னை சிட்டியில் இப்படம் 3.41 கோடிகளை வசூலித்துள்ளது.
1. மெட்ராஸ்
அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வரும் இப்படம் சென்ற வார இறுதியில் 34
லட்சங்களை வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இதன்
சென்னை வசூல் 3.5 கோடிகள்.
Comments
Post a Comment