மாஸ் படத்தை ரொம்ப எதிர்பார்க்கும் சூர்யா வெங்கட் பிரபு!!!

27th of October 2014
சென்னை:சூர்யா அஞ்சான் படத்தின் தோல்வியால் அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற வெறியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.
 
வெங்கட் பிரபு , கோவா , மங்காத்த போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் , ஆனால் கடைசியாக எடுத்த பிரியாணி படம் அவர் எதிர்ப்பார்த்த படி அமையவில்லை , அதனால் இவர்கள் இருவருமே மாஸ் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற வெறியில் இருக்கின்றனர்.

சூரியாவின் ஸ்பெஷல் ஒவ்வொரு படத்துக்கும் வித்யாசமான தோற்றத்தை கொடுப்பார், ஆனால் இடையில் ஆக்சன் மாசாலப் படங்களான சிங்கம் , சிங்கம் 2 படங்களில் நடித்தார்.
 
தற்போது மீண்டும் வித்யாசமான டெரர் லுக்கில் மாஸ் படத்தில் தோன்றுகிறார் ,அப்படத்தின் 1 லுக் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Comments