24th of October 2014
சென்னை:நயன்தாராவும் , த்ரிஷாவும் திரையுலகில் நுழைந்ததில் இருந்து இன்று வரை இருவரும் முன்னணி நடிகைகளாகதான் இருக்கிறார்கள்.
இருவரும் ஒரே சமயத்தில் என்ட்ரி கொடுத்தவர்கள் என்பதால் இவர்களுக்கிடையே கொஞ்சம் போட்டி பொறாமையும் இருந்தது.
ஆனால் தற்போது இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர், இருவரும் தனிமையில் அமர்ந்து மணிகணக்கில் பேசுகிறார்கள் .
அப்படி இருந்தவர்கள் இப்படி மாறுவதற்கு காரணமே ஆர்யாதான் , நடிகர் ஆர்யா இரண்டு பேருக்கும் நல்ல நண்பராக இருந்ததால்தான் இது சாத்தியம் என சொல்லலாம்.
நயன்தாரா தற்போதெல்லாம் ஹீரோவுக்கு நிகரான கதாப்பாத்தரத்தில் நடிக்கத்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்
த்ரிஷாவிடம் , உங்கள் தோழி நயன்தாராவைப்போல் நீங்களும் ஹீரோக்களுக்கு நிகரான கதைகளில் நடிக்கலாமில்ல என்று கேட்டால். அதெல்லாம் எனக்கு செட்டாகாது, அந்த மாதிரியான கதையில் நடித்து படம் ஓடினால் நல்லாயிருக்கும் , ஓடிலினா என்ன பண்றது , இருக்கிற பெயரை காப்பாத்தினாலே போதும், அதனால்தான் அந்த மாதிரியான ரிஸ்க்கெல்லாம் எடுக்க ஆசைபடுவதில்லை என்கிறார் த்ரிஷா.
Comments
Post a Comment