கிளைமாக்ஸ் சூட் பண்ணமாட்டேன்” – பாலாவிடம் மிஷ்கின் போட்ட கண்டிஷன்!!!

22nd of October 2014
சென்னை:இரண்டு வெவ்வேறு விதமான தளங்களில் இயங்கும் பாலாவும் மிஷ்கினும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் படம் ‘பிசாசு’ மாதிரித்தானே இருக்கும்..  அதனாலேயே மிஷ்கினின் முந்தைய படங்களை விட இதற்கு ஸ்பாட் லைட் ஜாஸ்தியாகவே பாய்ச்சப்பட்டு இருக்கிறது.

இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்த பாலா இயக்குனர் மிஷ்கினிடம் இதுவரைக்கும் ‘உன் சம்பளம் என்ன’ என்று கேட்கவே இல்லையாம். அதுபோல ‘பிசாசு’ ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே எட்டிப்பார்க்காத பாலாவை “நீங்க ஷூட்டிங் பார்க்க வரலைன்னா நான் க்ளைமாக்ஸ் சூட் பண்ணமாட்டேன்” என பிடிவாதம் பிடித்திருக்கிறார் மிஷ்கின்.
 
அதன்பிறகு தான் ‘பிசாசு’ உருவாவதை பார்க்க வந்தாராம் பாலா. ஹாங்காங்கில் இருந்து வந்த ஸ்டண்ட் மாஸ்டர் படமாக்கிய சண்டைக்காட்சிகளை மூன்றுமணி நேரம் பொறுமையாக அமர்ந்து பார்த்த பாலா, ‘இது நல்ல சினிமாவா வரும்டா’ என நம்பிக்கையாக சொல்லிவிட்டு போனாராம்.

Comments