மாமனாருக்காக மருமகன் காத்திருக்கத்தான் வேண்டும்!!!

20th of October 2014
சென்னை:கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். எப்படியும் நவம்பர் முதல் வாரத்துக்குள் முழு வேலைகளும் முடிவடைந்துவிடும். அடுத்து ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.

ஆனால் ஆடியோ ரிலீஸ் செய்த சில நாட்களிலேயே ரிலீஸ் செய்யும் தேதியையும் அறிவித்து படத்தை வெளியிடுவதுதான் கௌரவமாக இருக்கும்.. ஆனால் ‘அனேகன்’ டீம் இரண்டு காரணங்களால் ரிலீஸ் தேதியை அறிவிக்க தயங்குகிறது.
 
ஒன்று சூப்பர்ஸ்டாரின் ‘லிங்கா’.. இன்னொன்று ஷங்கரின் ‘ஐ’… இதில் ‘லிங்கா’ டிசம்பரிலும் ‘ஐ’ நவம்பரிலும் வெளியாகலாம் என்பது தற்போதைய நிலை.. இந்தப்படங்களின் ரிலீஸ் தேதி கன்பார்மாக தெரிந்தால் தான் ‘அனேகன்’ தேதியை அறிவிக்க வசதியாக இருக்கும். ஆகையால் ‘ஐ ஆம் வெய்ட்டிங்’ என காத்திருக்கிறார் தனுஷ்..

Comments