லிங்கா படத்தில் ரஜினியுடன் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம்?!!!

2nd of October 2014
சென்னை:லிங்கா படத்தில் ரஜினியுடன் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா ஏற்கனவே கமல், விஜய், விக்ரம், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினியுடன் இதுவரை நடிக்கவில்லை. ரஜினி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி இருந்தார்.


இந்த நிலையில் ரஜினியுடன் லிங்கா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட திரிஷாவை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா ஏற்கனவே சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். திரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவதை தவிர்த்து வருகிறார். ஆனால் ரஜினி படம் என்பதால் சம்மதிப்பார் என தெரிகிறது.

திரிஷா தற்போது கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத்துடன் நடித்து வருகிறார். மேலும் இரு புது படங்களுக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம்ரவியுடன் நடித்த பூலோகம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Comments